தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை- ஜெயக்குமார்

8 0

தினகரன் புதிய கட்சியால் எங்களுக்கு கவலை இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் அவரது இல்லத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் இருக்கக் கூடிய தீவுகளில் சென்று தங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரியாமல் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களுக்கு விமானம் மூலமாக தகவல் வழங்கி வருகிறோம்.

மலை ஏறும் பயிற்சி ஒரு வீர சாகச விளையாட்டு. அதனை தடை செய்ய முடியாது. அதே நேரம் சுற்றுலா மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றப்பின்னணி கொண்டயாரும் அ.தி.மு.க.வில் கிடையாது. குற்றபின்னணி கொண்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கூறப்படும் கருத்தை மற்ற கட்சிகள் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

தினகரன் மட்டுமல்ல யார் வேண்டு மானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அ.தி.மு.க.வின் கட்சி கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊடகங்களில் பேசுவதை ஜெயக்குமார் குறைத்து கொள்ள வேண்டும் என்று வைகோ கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு ‘‘வைகோ பிறக்கும் போதே ஒலிப் பெருக்கியுடன் பிறந்தவர். பேசுவதில் வீரசாகசம் செய்பவர்’’ என்று பதிலளித்தார்.

Related Post

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்வு

Posted by - May 29, 2017 0
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.

அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாதது ஏன்?: கவர்னரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - November 15, 2017 0
நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பினால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவதையடுத்து கவர்னர் ஆய்வு நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓட்டுக்கு பணம்: ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மீது கமல்ஹாசன் கடும் சாடல்

Posted by - January 4, 2018 0
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க பணம் வினியோகிக்கப்பட்டதையும், அதை வாக்காளர்கள் வாங்கியதையும் நடிகர் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் பிரதமரிடம் ஒப்படைப்பு

Posted by - February 18, 2017 0
நீட் தேர்வு தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமர் இல்லத்துக்கு சென்ற திருச்சி சிவா எம்.பி., பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வழங்கினார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு – நீதிபதி அருணா ஜெகதீசனின் 3ம் கட்ட விசாரணை நிறைவு

Posted by - August 29, 2018 0
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.

Leave a comment

Your email address will not be published.