ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மூடல்

209 0

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இன்று(13) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

அம்மை நோய் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதன் காரணமாக பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 3 தினங்களுக்குள்பல்கலைக்கழகத்தின் உள்ளக விடுதியில் உள்ள 27 மாணவர்களுக்கும் வெளி விடுதியில் உள்ள 8 மாணவர்களுக்கும் அம்மை நோய் பரவியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment