சீனா – சுவிட்சர்லாந்து அரசுகளுக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டம்

190 0

சீனாவில் திபெத்தியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கொண்டு வர வேண்டும் என 5 ஆயிரம் திபெத் மக்கள் சுவிட்சர்லாந்தில் போராட்டம் நடத்தினர்.

திபெத் நாடானது சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. திபெத் மக்கள் சீனாவை தவிர இந்தியா, நேபாளம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். திபெத் மக்கள் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால், சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சுவிட்சர்லாந்தில் மட்டும் 7,500 திபெத்திய மக்கள் உள்ளனர். அவர்கள் சுவிட்சர்லாந்தில் திபெத்திய மக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும் சீனாவிடமிருந்து திபெத்திற்கு விடுதலை வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. இரு நாடுகளும் நட்பு நாடாக உள்ளன. இதனால் திபெத் மக்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்திலிருந்து வெளியே செல்ல விரும்பும் திபெத் மக்களுக்கு பாஸ்போர்ட் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமாக திபெத்திய மக்கள் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் நோக்கி நேற்று பேரணியில் ஈடுபட்டனர். திபெத்திய மக்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலுக்கு முடிவு கட்ட வேண்டும். மேலும் சீனாவிடமிருந்து திபெத்திற்கு விடுதலை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

 

Leave a comment