காட்டுத் தீவிபத்து: வனத்துறை அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- தினகரன்

272 0

குரங்கணி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை வனத்துறை தடுக்காமலும், அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி காட்டுத்தீ விபத்து பற்றி தினகரன் எம்.எல்.ஏ. டுவிட்டரில் தெரிவித்த கருத்து வருமாறு:-

தேனி குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 9 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கின்றது. அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

போடி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேல் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில் உரிய முன் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடவில்லை.

மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டோரை தமிழக அரசின் வனத்துறை தடுக்காமலும், அலட்சியமாக இருந்ததே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம்.

இனி மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு, வழிகாட்டிகள் நியமனம் போன்ற விதிமுறைகள் மற்றும் அனுமதிகளை முறையாக கடை பிடிக்க வேண்டும்.இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்

Leave a comment