இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களை உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும்.!-தயா­சிறி ஜெய­சே­கர

303 0

இலங்கையில் உள்ள சகல இன­வாத, அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளும் உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும். சகல அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளையும் நாட்டில்  தடை­செய்­யப்­பட்ட  அமைப்­பு­க­ளாக அர­சாங்கம் அறி­விக்க வேண்டும் என அமைச்சர் தயா­சிறி ஜெய­சே­கர தெரி­வித்தார்.

இன­வா­தத்தை தூண்டும் நபர்­களை 10 ஆண்­டுகள் சிறையில் அடைக்கும் சட்­டத்­தையும் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­ற த்தில் வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்­சினை ஒன்றை  எழுப்பி கருத்துக் கூறும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

சாதா­ரண  சம்­பவம் ஒன்றை அடிப்­ப­டை­யாக வைத்து கடந்த சில தினங்­க­ளாக கண்­டியில் இடம்­பெற்ற இன­வாத முரண்­பாடு மிகவும் வேத­னைக்­கு­ரிய சம்­ப­வ­மாகும். இந்த நாட்டில் இன வன்­மு­றைகள் மூல­மான வர­லாறு மற்றும்  அதன் விளை­வுகள் என்­ன­வென்று   நல்­ல­தொரு படிப்­பினை எமக்கு உள்­ளது. இதனால், பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு நாம் முகங்­கொ­டுக்க நேர்ந்­தது. அதன் தாக்கம் இன்றும் நாட்டில் உள்­ளது. எம்மால் பயங்­க­ர­வா­தத்தை முழு­மை­யாக ஒழிக்க முடிந்த போதிலும் அதன் மூல­மான தாக்­கத்தை  இன்றும் எம்மால் உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

கடந்த காலத்­திலும் இவ்­வாறு இன­வாத, மத­வாத மற்றும் அர­சியல் சூழ்ச்­சிகள், அதன் மூல­மான இளை­ஞர்­களின் ஆதங்கம் என்­ப­வற்றின் விளை­வு­களே நாட்டை  பயங்­க­ர­வாதம் வரையில்  கொண்டு சென்

றது.  இலங்கை நாடென்­பது சிங்­கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்­த­வரும் இணைந்து வாழும் நாடு என்­பதை அனைத்து மக்­களும்  ஏற்­று­க்கொள்ள வேண்டும். அதை ஏற்­று­க்கொள்­ளாத வரையில் இந்த நாட்டில் அமைதி நில­வப்­போ­வ­தில்லை. இந்த நாட்டில் நாம் மிகவும் குறைந்த ஆண்­டு­கா­லமே வாழப்­போ­கிறோம். ஆகவே, இந்த நாட்­டினை எமது எதிர்­கால சமூ­கத்­திற்கும் விட்டுச் செல்ல வேண்டும்.

ஒரு­சிலர் அல்­லது ஒருவர் இருவர் இன­வா­தத்தை தூண்­டு­வதன் மூல­மாக  நாடே அழியும் நிலை ஏற்­படும். அதற்­கான ஒரு உதா­ர­ணமே இந்த கண்டி திகன சம்­ப­வ­மாகும். இந்த நாட்டில் ஒரு வரு­டத்தில் பல நூறு பேர் இறக்­கின்­றனர். பல நூறு வாகன விபத்­துக்கள் இந்த நாட்டில் இடம்­பெ­று­கின்­றன. அவற்­றை­யெல்லாம் இன­வா­த­மாக கருத முடி­யாது. எனினும் இவ்­வா­றான  ஒரு சில சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக  வைத்து திட்­ட­மிட்ட இன­வாத நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதை தடுக்க வேண்டும். கண்­டியில் இடம்­பெற்ற இன முரண்­பாட்­டுக்கு ஒரு சாதா­ரண சம்­ப­வமே கார­ண­மாகும். இந்த கார­ணியை சாத­க­மாக பயன்­ப­டுத்தி ஒரு சில இன­வா­திகள், இன­வாத அமைப்­புகள் நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இதனால் நாட்டில் உள்ள சிங்­கள, முஸ்லிம் மக்கள் அனை­வ­ருமே அச்­சத்தில் உள்­ளனர்.

இந்த சம்­ப­வத்தை அடுத்து ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரின் தலை­யீட்டில் பிரச்­சி­னைகள் சுமுக­மாக நிறை­வுக்கு வந்­துள்­ளன. எனினும் இன்று மனித  உரிமை அமைப்­பு­களும் சர்­வ­தேச ஊட­கங்­களும் தவ­றான வகையில் இலங்­கையை விமர்­சிக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அல்­ஜ­சிரா, பி.பி.சி. ஊட­கங்­களில் இலங்கை குறித்த தவ­றான செய்­திகள் இந்த சம்­ப­வத்­தின மூல­மாக வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. உண்­மைக்கு புறம்­பான செய்­தி­களை கூறி நாட்டின் தன்­மை­யினை அழிக்கும் நட­ வ­டிக்கை முன்­னெ­டுக்­க­ப்பட்டு வரு­கின்றது.

மனித உரிமை அமைப்­பு­களும் இதனை ஒரு கார­ணி­யாக வைத்­து­க்கொண்டு   பேசி வரு­கின்­றன . ஒரு நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒன்று தோற்­று­விக்­கப்­பட்டு வரும் நிலையில் அதனை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த அர­சாங்­கமும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­தாக வேண்டும். இதில் நியாயம், தர்மம் ஆகி­ய­வற்றை வேடிக்கை பார்த்து எந்த தீர்வும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. இதில் மனித உரி­மைகள் அமைப்­பு­களின் கருத்­து­களை அவ­தா­னித்­துக்­கொண்டு செயற்­பட முடி­யாது.

இலங்­கையில் செயற்­படும் இன­வாத அமைப்­புகள் இவ்­வா­றான சம்­ப­வங்­களை சாத­க­மாக வைத்­து­க்கொண்டு இன­வா­தத்தை கக்கி வரு­கின்­றன. இதனை முழு­மை­யாக நிறுத்த வேண்டும் என்றால் முத லில் இலங்­கையில் உள்ள சகல இன­ வாத, அடிப்­ப­­டை­வாத அமைப்­பு­க­ளையும் உட­ன­டி­யாக தடை­செய்ய வேண்டும். சகல அடிப்­ப­டை­வாத அமைப்­பு­க­ளையும் தடை­ செய்­யப்­ப ட்ட அமைப்­புகளாக அர­சாங்கம் அறிவிக்க வேண்டும். இனம் சார்ந்த அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவை நாட் டில் இன வாதத்தை தூண்டும் வகையில் செயற்பட முடியாது.

இனவாதத்தை தூண்டினால் அந்த நபர் களை 10 ஆண்டுகால சிறையில் அடைக்க முடியும் என்ற சட்டம் இலங்கையில் உள்ளது. அதனை உடனடியாக நடைமுறை க்கு கொண்டுவர வேண்டும். மக்கள் ஐக் கியத்தை நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர பிரிவினையின் பக்கம் ஈர்க்கப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment