இலங்கையில் இருந்து இலஞ்ச ஊழல் மோசடிகளை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் தேசிய செயற்றிட்டம் வகுக்கப்படுகிறது.
இதன் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் முற்றுமுழுதாக மறுசீரமைக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இலஞ்ச ஊழல் விசாரணை செயற்பாடுகளையும் வழக்கு தொடுக்கும் நடைமுறைகளையும் வலுவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாரதூரமமான ஊழல் மோசடி வழக்குகளை மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாமின் முன்னிலையில் நாளாந்தம் விசாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் சட்டத்தரணி சரத் ஜயமான இதன்போது தெரிவித்தார்.

