வடமேல்மாகாண சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.

