இரத்தினபுரியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

751 80

இரத்தினபுரி, திம்முல்விட்டய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் உச்சமடைய ஒருவர் மற்றையவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 39 வயதுடையவர் என்பதுடன் சந்தேகநபர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment