தேசத்துரோகிகளுக்கு இரையாகாமல் பொறுமையாக செயற்படுங்கள்- ரணில்

228 0

இனவாதத்தை தூண்டி நாட்டிற்குள் கலவரம் ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குழப்பி அதிகாரத்திற்கு வர சிலர் முயல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நாசகார ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பின்நிற்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறும் எந்தவிதமான பதற்ற நிலைமையையும் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு சபை நேற்று மாலை கூடியது. எதுவித இடையூறுமின்றி மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கத் தேவையான சூழலை ஏற்படுத்த இங்கு முடிவு செய்யப்பட்டது. நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறும் எந்தவிதமான பதற்ற நிலைமையையும் கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்குமாறும் பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பொலிஸாருக்கு இதன் போது ஆலோசனை வழங்கப்பட்டது.

இலங்கையர்கள் என்ற வகையில் வேறு இன மற்றும் மதத்தினர் இந்த நாட்டில் வாழ்கிறார்கள். சகலருக்கும தமது மதத்தை பின்பற்ற உரிமையிருக்கிறது. முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் குறித்து எமது கவலையை தெரிவிக்கிறோம்.

திட்டமிட்ட வகையில் நாசகார ரீதியான செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க நாம் பின்நிற்க மாட்டோம். இந்த பதற்ற நிலைமையில் மிகவும் அமைதியாகவும் புத்திசாதுர்யமாகவும் நிலைமைய கட்டுப்படுத்த செயற்பட்ட மகாசங்சத்தினர், முஸ்லிம் மௌலவிமார்கள் அடங்கலான மதத் தலைவர்கள் மற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு எமது நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த துரதிஷ்டமான சம்பவத்தினால் உயிர் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு துரிதமாக நஷ்டஈடு வழங்க அரசாங்கம நடவடிக்கை எடுக்கும் இனவாதத்தினூடக தமது நோக்கத்தை நிறைவேற்ற எதிர்பார்த்திருக்கும் தேசத்துரோகிகளுக்கு இரையாகாமல் பொறுமையாகவும் புத்தியுடனும் தூரநோக்குடனும் செயற்படுமாறு சகல மக்களிடமும் கோருகிறேன் எனவும் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபைத் ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு பிரதமர் தெரிவித்தார்.

Leave a comment