இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்தது- யுனிசெப் தகவல்

230 0

இந்தியாவில் குழந்தை திருமணம் பாதியாக குறைந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 12 மில்லியன் சிறுமிகளுக்கு 18 வயது நிறைவு பெறும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்தியாவில் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நடைபெறுகிறது.

பெண்களுக்கு கல்வி மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்கலாம். இது குறித்து அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

யுனிசெப் அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் பாதியாக குறைந்திருக்கிறது. 47 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இருப்பினும் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். 2030ஆம் ஆண்டிற்குள் குழந்தை திருமணங்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 18 வயது பூர்த்தியாகாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் குழந்தையின் பெற்றோருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். ஆனால் அதையும் மீறி பல இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

Leave a comment