பாடசாலைகளில் அதிபர்களுக்கு மேலதிகமாக முகாமையாளர் பதவிகள்

246 0

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் நிர்வாகப் பொறுப்புக்கள் பாடசாலை முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் என்ற இரண்டு பதவிகள் புதிதாக உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாமையாளர்கள் பாடசாலை நிர்வாகப் பணிகளில் நேரடியாகவே பங்களிப்பினைச் செய்ய உள்ளனர்.

பாடசாலையின் பிரதானி என்ற வகையில் அதிபர், கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட முகாமையாளர் பதவிகள் தொடர்பான யோசனைகள், அனுமதிக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a comment