மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆக மக்கள் விரும்பவில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

6922 0

மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் தான் விரும்புகிறார்களே தவிர பொதுமக்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அமைச்சர் ஜெயக்குமாரை ‘முந்திரி கொட்டை’ என்று கூறினார்.

அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் முந்திரி கொட்டை போல எந்த வி‌ஷயத்தையும் சொல்வதில்லை. ஒரு தலைவர் என்பவர் முதிர்ச்சி அடைந்தவராக இருக்க வேண்டும். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும்.

மு.க.ஸ்டாலின் பக்குவப்பட்ட தலைவர் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் முதல்- அமைச்சர் ஆரோக்கியமான ஜனநாயக முறைப்படி எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும். காவிரி பிரச்சனையில் நாம் ஒன்றாக கூட வேண்டும். விருப்பு வெறுப்புகளை கடந்து நமது ஒரே நோக்கம் காவிரி நீரை பெற வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். என்பதை மட்டும் குறிக்கோளாக வைத்து மனமாட்சியை மறந்து பேசும்போது சொல்லாத ஒன்றை வெளியில் போய் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அப்போது அவருக்கு மெச்சூரிட்டி இருக்கிறதா? இல்லையா என்ற கேள்வி வருகிறது.அவர் தவறான தகவல் கொடுக்கும் போது அதற்கு பதில் அளித்தால் முந்திரிகொட்டையா? தலைவர்கள் ‘முந்திரி கொட்டை’ என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.

மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் தான் விரும்புகிறார்களே தவிர பொதுமக்கள் விரும்பவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனையின் போது தி.மு.க. எம்.பி.க்களை ஏன் ராஜினாமா செய்ய வைக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment