இலக்கை நோக்கிய பயணத்தில் அயராத மனிதநேய ஈருருளிப் பணியாளர்கள்- நாள் 5

13632 30

இன்றைய தினம் சீரற்ற காலநிலையிலும் மாவீரர்களின் இலட்சிய உறுதியை மனதில் நிறுத்தி 87 கிலோமீற்றர் தூரத்தை கடந்து மனித நேய ஈருருளிப் பயணம் சார்புருக்கன்  மாநகரை வந்தடைந்து மக்கள் சந்திப்புடன் நிறைவடைந்தது.

நாளை திங்கட்கிழமை (05/03/2018)  காலை 9.30 மணிக்கு. சார்புருக்கன் மாநகர முதல்வரை சந்தித்து எமது அறவழி போராட்ட கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை  எடுத்துக் கூறியும் அவர்களின் ஆதரவு வேண்டியும் சந்திப்பு நடைபெறவுள்ளது.

சந்திப்பு முடிவடைந்தது  பிரான்ஸ் நோக்கி நகர்ந்து பிரான்ஸ் Sarreguemines மாநகர சபை உறுப்பினர்களுடனும் ஊடகங்களுடனும்  மதியம் 13.30 மணிக்கு சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு க்களிலும் மக்கள் கலந்து கொண்டு அறவழி போராட்டத்திற்கு  வலுச்சேர்குமாறு மனிதநேய ஈருருளிப்  பணியாளர்கள் உரிமையுடன் அழைக்கின்றார்கள் .

“வெல்வோம் தமிழீழம்”

Leave a comment