பேரவை மக்கள் நலலை முன்நிறுத்தி அரசிலை முன்கொண்டு செல்ல திட்டம்

21911 0

மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்மக்கள் பேரவையின் அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் என தமிழ் மக்கள் பேரவை 11 பேர் கொண்ட செயற்குழுவுக்கு ஒன்றினை நியமித்துள்ளது.

மாதந்தோறும் ஒன்றுகூடும் குறித்த செயற்குழு தமிழ் மக்கள் போரவையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட 11 பேர் குறித்த செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பின்வருவோர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

1. வைத்திய கலாநிதி இலக்ஸ்மன் அவர்கள்

2. வைத்திய கலாநிதி சிவன்சுதன் அவர்கள்

3. பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள்

4. பேராசிரியர் சிவநாதன் அவர்கள்

5. ஜனாதிபதி சட்டத்தரணி புவிதரன் அவர்கள்

6. கல்லூரி அதிபரும் ஊடகவியளாளருமான திரு.விஜயசுந்தரம் அவர்கள்

7. வணக்கத்திற்குரிய ஜெயபாலன் குரூஸ் அவர்கள்

8. திரு.ஜனார்த்தனன் அவர்கள்

9. திரு.வசந்தராஜா அவர்கள்

10. வைத்திய கலாநிதி கருணாகரன் அவர்கள்

இவர்கள் தமது முதலாவது செயற்றிட்டமாக எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10.00 மணிக்கு திருகோணமலையில் பொதுமக்களுக்கு அரசியல் ஞானம் புகட்டும் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தவுள்ளனர்.
குறித்த நிகழ்வின்  பேச்சாளர்களாக திரு.யோதிலிங்கம் அவர்கள் இணைப்பாட்சி பற்றியும், சிரேஸ்ட விரவுரையாளர் K.T. கணேசலிங்கம் அவர்கள் வட கிழக்கு இணைப்பு பற்றியும், சிரேஸ்ட சட்டத்தரணி K.S.இரத்னவேல் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பற்றிய பிரேரணை பற்றியும் பேச இருக்கின்றார்கள்.

Leave a comment