ஹொங்கொங்கில் நடைபெற்ற தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு சீனாவிடம் கையளிக்கப்பட்ட பின்னர், ஹொங்கொங்கில் நடைபெற்ற முக்கிய தேர்தல் இதுவாகும்.
பிராந்திய சபையின் 70 ஆசனங்களுக்காக இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் 35 ஆசனங்களுக்கான பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக தெரிவுசெய்யவுள்ளனர்.
கடந்த 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தமுறை 58வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் மூன்றில் ஒரு வீத ஆசனங்களை கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

