மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாடு திருப்பினார்.
இவரை வரவேற்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுநாயக்க வானூர்தி தளத்திற்கு வந்திருந்தனர்.
அத்துடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஆதரவாளர்களும் வானூர்தி நிலையம் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மலேசியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் அமைப்புகளுக்கு எதிராக கோஷம் எழுப்பட்டுள்ளது.
ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு மலேசியா சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

