யாழ்ப்பாண குடாநாட்டில் கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட கூட்டுறவாளர்கள் ஒன்றிணைந்து நுண்கடன் நிதி நிறுவனங்களின் கொடிய வட்டிக்கு எதிராக கண்டன பேரணியை நடாத்தியுள்ளனர்.
கிராமிய மக்களின் உழைப்பை சுரண்டும் நுண்கடன் நிதி நிறுவனங்களின் கொடிய வட்டிக்கு எதிராகவும், வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட நிதியை கிராமிய வங்கிக@டாக மக்களுக்கு நுண்கடன் திட்டங்களை வழங்கக்கோரியும் பேரணி நடாத்தியுள்ளனர்.
வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய பிரதேசங்களில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், கடற்தொழிலாளர் சங்கங்கள் ஆகியன குறித்த பேரணியில் கலந்துகொண்டன.
பேரணியானது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலில் இருந்து ஆரம்பித்து யாழ்.மாவட்ட செலகத்தில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதையடுத்து நிறைவு பெற்றது.
அத்துடன் வடக்கு மாகாண ஆளுநருக்குரிய மகஜர் வடக்கு மாகாண ஆளுநர் செலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

