புலத்சிங்ஹல பகுதியில் கடை ஒன்றில் தீ

189 0

புலத்சிங்ஹல கலவெல்லாவ பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயினால் கடைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடையிலிருந்த பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பிற்காக ஹொரணை தீயணைப்பு பிரிவினர் வரும் வேளையில் கடை தீயினால் முற்றாக சேதமடைந்திருந்ததுடன் தீயணைப்பு வீரர்கள், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இனைந்து தீ ஏனைய கடைகளுக்கு பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Leave a comment