இரத்மலானை வான்படை தளத்துக்கு அருகில் வான்படை வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சக வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, கைதுசெய்யப்பட்ட சக வான்படை வீரரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரத்மலானை வான்படை தளத்துக்கு செல்லும் வழியில் 41 வயதான குறித்த வான்படை வீரர் உடலமாக மீட்கப்பட்டார்.
சம்வம் தொடர்பில் சீசீடிவி காணொளி மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சக வீரர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

