கிளிநொச்சியில், சர்வ மத வழிபாட்டு யாத்திரை குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளனர். (காணொளி)

351 0

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான, சர்வ மத வழிபாட்டு யாத்திரை குழுவினர், கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், 372 நாட்களாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று சந்தித்த சர்வ மத குழுவினர் வழிபாட்டினையும் முன்னெடுத்தனர்.

ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வருகை தந்த பௌத்த துறவிகள், மக்களை சந்தித்தனர்.

உலக அமைதிப் பணியில் “நிப்பொன்சன் மியொஹொஜி” ஜப்பான் பௌத்த துறவிகளே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் விசேட வழிபாட்டினையும் முன்னெடுத்தனர்.

இதேபோன்று, 1984 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்து, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று பிரார்த்தனை மற்றும் யாத்திரைகளை முன்னெடுத்தாக, சர்வ மத அமைப்பினர் தெரிவித்தனர்.

Leave a comment