பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – எண்ணெய் நிறுவனங்களின் பணி பாதிப்பு

322 0

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்பட்டன.

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எங்கா மாகாணத்தின் போர்கெரா பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்ததாகது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. எனினும், நிலநடுக்கம் மையம் கொண்ட பகுதிக்கு அருகில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக பணிகளை நிறுத்தின. ஹைட்ஸ் என்ற எரிவாயு ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.  பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Leave a comment