யுத்தத்தை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்த வீரர் மலேசியாவுக்கு செல்லும் போது எதிர்ப்பு – விமல் சாடல்

318 0

Mahinda_Rajapaksaஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்காலத்தில் தனியான ஒரு கட்சியாக கட்டியெழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்ச இதனை தெரிவித்தார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தேசத்தின் வீரரை திருடர் என்று சித்தரிக்கிறார்கள்.

யுத்தத்தை வெற்றிக்கொண்டு இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்த  வீரர் மலேசியாவுக்கு செல்லும் போது புலிகள் கொல்ல பார்க்கிறார்கள்.

ஆனால் நாம் அதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதற்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது, லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

அதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி புதிய கட்சியாக, புதிய உத்வேகத்துடன் விரைவில் தோற்றம் பெறும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டார்.