சட்டவிரோதமான முறையில் இந்நாட்டு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 129 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவர்களில் 109 மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அதன்படி கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 20 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அனுமதி கிடைத்துள்ளதாக நீர்வளங்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்திய கடற்பரப்பில் கைது செய்யபட்டுள்ள 6 இலங்கை மீனவர்கள் இந்திய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 6 நபர்கள் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேர் மீனவர்கள் இல்லை எனவும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சிறிய படகொன்றுடன் கைது செய்யப்பட்ட ஏனைய இருவர் தொடர்பிலான விசாரணைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

