இன்றைய அமைச்சர் நாளை சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று அங்குனுகொலபலஸ்ஸவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
திறமைக்கு முன்னுரிமை வழங்கும் வகையிலான அமைச்சரவை மாற்றமொன்று இடம்பெறுமென மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்கு ஏற்ப செயற்படுவது ஜனாதிபதியின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் விரும்புபவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்காமல் கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் கருத்தில் கொண்டு அமைச்சர்கள் நியமிக்கப்படல் வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

