முச்சக்கரவண்டியின் 1 ஆவது கிலோ மீட்டருக்கான கட்டணம் அதிகரிப்பு

10110 0

முச்சக்கரவண்டியின் உதிரிப் பாகங்கள் விலை அதிகரித்துள்ளதனால் ஆரம்ப கிலோமீட்டருக்கான பயணக் கட்டணமாக அறவிடப்பட்டு வந்த 50.00 ரூபாவை 60.00 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  தேசிய முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த கட்டண அதிகரிப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

உதிரிப் பாகங்களின் விலையை குறைக்குமாறு பல தடவைகள் போக்குவரத்து அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் நியாயங்களைச் சமர்ப்பித்தும் இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாததனால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணமும் 10.00 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்

Leave a comment