பொதுக் கொள்கை என்ன என்பதை ரெலோ வெளிப்படையாகக் கூறவேண்டும்!

85 11

பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

பொதுக்­கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் தமிழ்க் கட்­சி­கள் அனைத்­தும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா அழைப்பு விடுத்­தி­ருந்­தார். அது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது,

பொதுக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் ஒன்­றி­ணை­யுங்­கள் என்று கூறு­ப­வர்­கள் அதன் ஊடாக என்ன கூற வரு­கின்­ற­னர் என்­பதை வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். தமது பொதுக் கொள்கை என்ன என்­ப­தைக் கூறி­னால் தான் நாம் ஆராய முடி­யும்.

தேர்­தல் காலங்­க­ளில் மக்­க­ளுக்கு கூறி­ய­வற்­றுக்கு முற்­றி­லும் மாறாக புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சிக்­கும், பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வும் இணங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பு­டன் கூட்­டுச் சேர முடி­யாது. அப்­ப­டி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் ரெலோ அமைப்பு அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைய அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.

அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்­கையை நாம் பொதுக் கொள்­கை­யாக ஏற்­றுக் கொள்ள முடி­யாது. பிழை­யான விடங்­க­ளைச் சரி எனக் கூறிக் கொண்­டி­ருக்­கும் கூட்­ட­மைப்­பு­டன் இருந்து கொண்டு இணைப்­புப் பற்­றிப் பேசிப் பய­னில்லை. ரெலோவை பிரிந்து வாருங்­கள் என்று கோர­வில்லை, அது அவர்­க­ளின் சுய­வி­ருப்பு.

தேர்­தல் காலத்­தில் ஆச­னப் பங்­கீட்­டுக்­காக கூட்­ட­மைப்பை விட்டு வில­கு­கின்­றோம் என்று கூறி­ய­வர்­கள் சில மணி நேரத்­தி­லேயே கூட்­ட­மைப்­பு­டன் இணைந்­த­னர். நிலை­யான கொள்கை ஏமு் இல்­லாத இவர்­கள் அனை­வ­ரை­யும் அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.- என்­றார்.

There are 11 comments

 1. I’m excited to discover this great site. I need to to thank you for your time just for this wonderful
  read!! I definitely loved every bit of it and I have you saved to fav to see new things in your site.

 2. Amazing! This blog looks exactly like my old one!
  It’s on a entirely different topic but it has pretty
  much the same layout and design. Wonderful choice of
  colors!

 3. I was recommended this web site by my cousin. I am not sure whether this
  post is written by him as no one else know such detailed about my trouble.

  You are amazing! Thanks!

 4. How To Use Propecia Generico Cialis Roma Levitra Biglietti On Line cialis Amoxicilina In Canada Medicine Get Pyridium Without Perscription Tablet With Free Shipping

Leave a comment

Your email address will not be published.