பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு 450 மில்லியன் நிதி

327 0

பெருந்தோட்ட பாடசாலைகளின் உடனடி தேவைகளை கருத்தில் கொண்டு அந்த பாடசாலைகளின் நடவடிக்கை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி திட்டம் கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர், கல்வி அமைச்சின் கட்டிட அபிவிருத்திக்கு பொறுப்பான பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர, சிறந்த பாடசாலை அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் பத்மநாதன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி சபாரஞ்சன் மற்றும் கல்வி அதிகாரிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment