வெளிப்படையான ஜனநாயகமாயின், வெளிப்படையான வாக்கெடுப்பே பொருத்தமானதாகும்- சி.விகே.சிவஞானம்(காணொளி)

267 0

வெளிப்படையான ஜனநாயகமாயின், வெளிப்படையான வாக்கெடுப்பே பொருத்தமானதாகும் என, வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.விகே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாநாகர சபை முதல்வர் தெரிவில் இரகசிய வாக்கெடுப் நடாத்தப்பட வேண்டுமென தெரிவித்த கருத்து தொடர்பாக, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

அத்துடன், தமது கட்சியில் இருந்து, அணி மாறி வாக்களிக்கின்ற நிலைமை அரிதிலும் அரிது என குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில், மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்த கருத்து தொடர்பாக, ஊடகவியலாளர் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, பொரும்பான்மை பெற்ற சபைகளில் பருத்தித்துறை, சாவகச்சேரி சபைகளில் குறுக்கீடு செய்ய மாட்டோம் எனவும், அதேபோன்று எமது பெரும்பான்மை சபைகளில் குதிரையோட்ட முயற்சிகளை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தெற்கின் அரசியல் நிலைமை தொடர்பில் பதில் அளிக்கும் போது, உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டமைக்காக பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரும் கோரிக்கை தவறாது எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கள்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment