இன்று இர­க­சிய வாக்­கு­மூலம் வழங்கும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர்

217 0

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை செய்­யப்பட்ட சம்­பவம் குறித்தும் அத­னுடன் தொடர்­பு­டைய சாட்­சி­களை மறைத்­தமை, பொய்­யான சாட்­சி­களை உரு­வாக்­கி­யமை தொடர்­பிலும் தான் அறிந்த அனைத்து விட­யங்­க­ளையும் இர­க­சிய வாக்கு மூல­மாக, சம்­பவம் இடம்­பெறும் போது கல்­கிசை பகு­திக்கு பொறுப்­பாக  இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஹேமந்த அதி­காரி இன்று வழ­ங­்க­வுள்      ளார்.

கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹா­லிடம் அவர் தனது சட்­டத்­த­ர­ணி­யான அத்­துல எஸ். ரண­கல ஊடாக  குற்­ற­வியல் சட்­டத்தின் 127 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக அந்த வாக்கு மூலத்தை அளிக்க அவர் அனு­மதி பெற்­றுள்ள நிலையில் இன்­றைய தினம் பிற்­பகல் 1.00 மணிக்கு இந்த இர­க­சிய வாக்கு மூலத்தை அவர் வழங்க வுள்ளார்.

லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விசா­ர­ணைகள் தற்­போது முக்­கிய கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில் சந்­தேகநபர்­களை கைது செய்­வ­தற்கு பொலிஸார் சாட்­சி­யங்­களை அழித்­த­வர்கள் ஊடாக திட்டம் வகுத்து விசா­ரணை செய்து வரு­கின்­றனர்.

சாட்­சி­களை அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் கைதான முதல் சந்­தேகநபர் இரா­ணுவ சார்ஜன்ட் மேஜர் உட­லா­கம பிணையில் உள்ள நிலையில்,  அண்­மையில் சாட்­சி­யங்­களை அழித்­தமை, பொய்­யான சாட்­சி­யங்­களை உரு­வாக்­கி­யமை தொடர்பில்  2 ஆம், 3 ஆம் சந்­தேக நபர்­க­ளாக கல்­கிசை பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பொறுப்­ப­தி­காரி திஸ்ஸ சுஹந்­த­பால, முன்னாள் மேல் மாகா­ணத்தின் தெற்கு பகு­திக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார ஆகியோர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த விவ­காரம் தொடர்பில்  குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­கர, உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் பீ.எஸ். திசேரா, விசாரணைப் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் சுதத் குமார ஆகியோரின் கீழ் விசேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Leave a comment