இன்றுடன் ஒரு வருடத்தை கடந்து 366வது நாளாகவும் தொடரும் காணாமற்போனோரின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!!

10 0

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட ஐவர் உயிரிழந்த நிலையில், இந்த மக்களுக்கான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

யுத்தகாலத்திலும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டகாலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில்உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 366 வது நாளாக தொடர்கிறது.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை என நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்திருந்த நிலையிலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது.

Related Post

இலங்கையின் சித்திரவதைகள் – விளக்கம் அளிக்க ஜெனிவா செல்கிறது குழு

Posted by - November 5, 2016 0
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழு, ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்தக்குழு, ஜெனிவாவில் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் காணிகளை கடற்படைக்கு வழங்க முடியாது!

Posted by - February 26, 2018 0
“முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது” என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

Posted by - January 16, 2017 0
“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு…

பிரித்தானியாவில் ஐநாவை நோக்கி நீதி கேட்கும் மாபெரும் அறவழிப் போராட்டம் ஆரம்பம் !

Posted by - February 26, 2017 0
தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு அல்லது நீடிக்கப்பட்ட கால அவகாசத்திற்கு…

Leave a comment

Your email address will not be published.