சிங்கள மயமாகும் கச்சதீவு!

218 0

ஈழ சமுத்திரமான கச்சதீவும் சிங்களமயப்பட்டு போகும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. கச்சதீவிலுள்ள புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் போது, இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிததுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி 24 ஆம் திகதி பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த திருவிழாவின் போது, முதன் முதலாக சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. இம்முறை காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க கலந்துகொண்டு சிங்கள மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், சிங்கள மக்களும் அதிகமாக கலந்துகொள்ளும் காரணத்தினால், சிங்கள மொழியில் முதன் முதலாக திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

இதுவரை காலமும் தமிழ் மொழியில் மட்டுமே திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வழமைபோல கச்சதீவுத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லப்படும் வடக்கு ஊடகவியலாளர்களுக்கான விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மறுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இம்முறை கொழும்பிலிருந்தே ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும் வடக்கு ஊடகவியலாளர்களின் பிரயாண ஒழுங்குகள் குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Leave a comment