ஜனா­தி­ப­திக்கும் பிர­த­மருக்கும் சம்­பந்தன் விடுக்கும் வேண்டுக்கோள்!

223 0

தேசிய அர­சாங்­கத்தை நீடித்து செல்­வதில் தடை­களை தகர்க்கும் நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சியம் குறித்தும், தேசிய அர­சாங்­கத்தின் தேவை மற்றும் அவற்றில் ஜனா­தி­பதி – பிர­த­மரின் இணக்­கப்­பாடு  தொடர்­பா­கவும்  நட்­பு­றவு ரீதியில்  எதிர்க் ­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும்  தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். ஜனா­தி­பதி- பிர­தமர் இரு­வரும் மக்கள் ஆணை­யினை முதன்­மைப்­ப­டுத்தி பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் தீர்வு காண­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் இரு­வ­ருக்கும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தேசிய அர­சாங்­கத்தின் நகர்­வு­களில் பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் முரண்

பா­டுகள் எழுந்­துள்ள நிலையில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தமது தனித்த அர­சியல் பயணம் குறித்து தனித்­த­னியே ஆராய்ந்து வரு­கின்­றனர். இந்­நி­லையில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை தனித்­த­னியே சந்­தித்தார். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் இடையில் ஏற்­பட்­டுள்ள பிணக்­கு­களை சுமு­க­மான வகையில் தீர்த்து வைக்­கவும் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­வதன் அவ­சி­யத்தை உணர்த்தும் வகை­யிலும் அவர் இந்த சந்­திப்­பு­களை முன்­னெ­டுத்­துள்ளார்.

இதன்­போது  தேசிய அர­சாங்­கத்தின்  தேவை குறித்தும், நல்­லாட்­சியை முன்­னெ­டுத்து செல்­வதில் தலை­மை­களின் முக்­கி­யத்­துவம் குறித்தும் ஜனா­தி­ப­தி­யிடம் குறிப்­பிட்­டுள்ளார்.

குறிப்­பாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தேசிய அர­சாங்­கத்­திற்கு கிடைத்த மக்கள் ஆணை மீறப்­பட கூடாது, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் கிடைத்­துள்ள பெறு­பே­று­களின் அடிப்­ப­டையில் கடந்தகால மக்கள் ஆணை­யினை தூக்கி வீசி ­விடக் கூடாது. மக்­களின் ஆணை என்­ன­வென்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­திகள் இன்னும் பூர­ண­ம­டை­யாத நிலையில், வாக்­கு­று­தி­களை  மீறும் செயற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்கக் கூடாது என்று சம்­பந்தன்   ஜனா­தி­ப­தி­யிடம் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் தேசிய அர­சாங்­கத்தில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் நபர்­களை கருத்திற் கொண்டு,  தடை­களை நிவர்த்தி செய்து தேசிய அர­சாங்­க­மா­கவே முன்­னெ­டுத்து செல்­வதே சிறந்த வழி­மு­றை­யாக அமையும். முரண்­பா­டுகள் இருக்­கின்ற கார­ணத்­தினால் மக்கள் ஆணை­யினை மீறிய தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டாம். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தேசிய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்க இந்த நாட்டின் மனித உரி­மைகள் பேணப்­படும், நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­படும், அடிப்­ப­டை­வாதம் நீக்­கப்­பட்டு சக­ல­ருக்­கு­மான ஜன­நா­யக அர­சாங்கம் உரு­வாகும், தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுத்­ த­ரப்­படும் என்ற வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. ஆகவே அவற்றை மீறவும் முடி­யாது. மீறவும் கூடாது. அவ்­வாறு செயற்­ப­டு­வது புதிய பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­விடும் என்­ப­தையும்  சம்­பந்தன் ஜனா­தி­ப­திக்கு எடுத்­து­ரைத்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சந்­திப்பை அடுத்து அன்­றைய இரவே பிர­த­மரை சந்­தித்த இரா. சம்­பந்தன். பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பின் போதும் இக்­கா­ர­ணி­களை முழு­மை­யாக எடுத்­து­ரைத்­த­தாக குறிப்­பிட்டார்.

பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் குறிப்­பி­டு­கையில்

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்­தலில் மக்கள் கொடுத்த ஆணை என்­ன­வென்­பதை அர­சாங்­க­மாக இரண்டு தலை­மை­களும் சிந்­தித்­துப் ­பார்க்க வேண்டும். இந்த நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்க அனை­வரும் இணைந்து ஒரு மாற்­றத்­தினை கொண்­டு­வந்­துள்ள நிலையில் அது முழு­மை­ய­டைய முன்னர் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை தவிர்க்க வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஒன்­றி­ணைந்து ஆட்­சி­ய­மைத்த போது இந்த நாட்டின் மனித  உரி­மை­களை பலப்­ப­டுத்தல், தேசிய பிரச்­சி­னை­களில் உறு­தி­யான தீர்­வு­களை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தல், நாட்டின் பொரு­ளா­தார மற்றும்  நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வது என்ற கார­ணி­களில் முன்­வைக்­கப்­பட்­டன. மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­றது.

பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­க­மாக செயற்­படும் நிலை­யி­லேயே இவற்­றினை வெற்­றி­ கொள்ள முடியும். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதற்­கான புரிந்­து­ணர்­வுகள் மூல­மா­கவே செயற்­பட ஆரம்­பித்­தன. அவ்­வாறு இருக்­கையில் இன்று மக்கள் ஆணைக்கு மாறாக தனிப்­பட்ட கார­ணி­களை கருத்திற் கொண்டு ஆட்­சி­ய­மைப்­பது மேலும் நாட்டில் பல்­வேறு முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்தும். பிணக்­கு­களை தீர்க்க பேச்­சு­வார்த்­தை­களை சுமு­க­மாக செயற்­பட வேண்டும். அதை விடுத்து  வேறு வழி­களில் செயற்­பட ஆரம்­பித்­ததால் புதிய பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை­மைகள் ஏற்­படும் என்­பதை எடுத்­து­ரைத்தார்.

இது தொடர்பில் சம்­பந்தன் கேச­ரிக்கு கருத்து வெளியி­டு­கையில்,

மேலும் இந்த அர­சாங்­கத்தில் பிரச்­சி­னைகள் உள்­ளன. பிர­தான இரண்டு கட்­சிகள் மத்­தி­யிலும் பல்­வேறு பிணக்­குகள் ஏற்­பட்­டுள்­ளன. இரண்டு தலை­வர்­களையும்

சந்­தித்து பேசி­யதில் அவர்­களின் பிரச்சினைகள் என்னவென்பது எனக்கு தெரியவந்துள்ளது. எனினும் பிரச்சினைகளை தீர்க்க சுமுகமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் ஆணையினை கருத்திற் கொண்டு அதற்கமைய பேச்சுவார்த் தைகளை முன்னெடுக்க முயற்சித்தால் சுமுகமான தீர்வு ஒன்றை எட்ட முடியும் என்பதை குறிப்பிட்டேன். எனது கருத்தும் அதுவாகவே உள்ளது.  ஜனாதிபதிக்கோ அல்லது  பிரதமருக்கோ புத்தி கூற  நான் செல்லவில்லை, நிலவும் பிரச்சினைகளில் நல்லிணக்க ரீதியில் சுமுகமான தீர்வுகளை எட்ட பொதுநலத்துடன் இரண்டு தரப்பினரையும் சந்தித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment