மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பவத்தில் நீதிமன்றத்தால் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்ட முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு கொழும்பு கேட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 02ம் திகதி உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறாயினும் அவர் அந்த உத்தரவுப்படி வாக்கமூலம் வழங்கியிருக்காத காரணத்தால் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

