பிரபல சிங்களப் பாடகரும் இசையமைப்பாளருமான விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி அமேந்திரா மீது சுமத்தப்பட்டுள்ள நகை மோசடி வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் 20ஆம் திகதி எடுத்துக்கொள்ள தங்காலை நீதவான் நீதிமன்ற நீதிபதி மஹி விஜேசேகர உத்தரவிட்டார்.
வங்கி ஊழியராகப் பணியாற்றிய ஹஷினி, தனது சேவைக் காலத்தில், வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகளில் சுமார் பன்னிரண்டு இலட்ச ரூபா மதிப்புள்ள நகைகளைக் கையாடல் செய்ததாக, குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸில் புகாரளித்திருந்தார்.
அதன்பேரிலேயே ஹஷினி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையே எதிர்வரும் 20ஆம் திகதி தங்காலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

