புகையிலை பொருட்களுக்கான வரியினை 90 வீதமாக அதிகரிக்க தன்னால் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை இழுத்தடிப்பு செய்யாமல் அதனை சட்டமூலமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கட்டிடமொன்றை திறந்து வைத்து உரையாடும் போது ஜனாதிபதி பகிரங்கமாக இதனைத் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைமுறைப்படுத்த வேண்டிய விடயத்தில் காலதாமதத்தை ஏற்படுத்தி முழு நாட்டு மக்களையும் நோயாளிகளாக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற பொலிஸ் சேவையின் 150வது வருட நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துக்கொண்டார்
பொலிஸ் சேவையானது பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நிறுவனம் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

