உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் இல்லை. அப்படி எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் நாங்கள் வரமாட்டோம்’
இவ்வாறு நேற்று திட்டவட்டமாக கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.பெரும்பான்மை பெறாத சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக வெளியாக செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
ஈ.பி.டி.பிக்கும் கூட்டமைப்புக்கும் எட்டாப்பொருத்தம். டக்ளசுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற கதைக்கே இடமில்லை, அவர்களுடைய கொள்கை வேறு. கூட்டமைப்பின் கொள்கை வேறு.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை என்பவற்றை வலுவாக ஆதரிக்கும் ஒரு கட்சி.
அந்த கட்சி ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒருபோதுமே வாய்ப்பில்லை. அவ்வாறு வெளியான செய்திகளில் உண்மையில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

