விஷப் போத்தல்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழ் சிங்கள தொண்டராசிரியர்கள்!!

369 0

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்கக்கோரி வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தற்கொலை செய்வதற்கான மருந்து போத்தல்களுடன் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தை மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும், யாழிலும் நேற்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக நடத்திவருகின்றனர்.182 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், வடமாகாண முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தால் அது தடைப்பட்டுள்ளது.

இதையடுத்தே வட மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமான தொண்டராசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதேபோல், கொழும்பில் மத்திய கல்வி அமைச்சின் முன்பாகவும் நேற்று முதல் தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை நடத்திவருகின்றனர்.இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம். எனக் கூறி மருந்து போத்தல்களுடன் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்கள்.

Leave a comment