பண்டாரிக்குளத்தில் பற்றி எரிந்தது வீடு!!பெருமளவு பொருட்கள் எரிந்து நாசம்!

264 0

வவுனியா – பண்டாரிகுளம் பகுதியில் இன்று மாலை வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  வவுனியா பண்டாரிகுளத்தில் சின்னையா சுப்பையா என்பவரின் வீட்டில் தாயும், மகளும் வசித்து வந்துள்ளனர்.நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடு தீடீரென தீப்பற்றியுள்ளது. அதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.வீட்டின் சுவாமி அறையில் இருந்த பொருட்களை குவித்து தீயிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த பண்டாரிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment