சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைது

293 0

Arrestedவெளிநாடுகளில் தொழில் பெறுவதற்கு சட்டவிரோத ஆவணங்களை தயாரித்த 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேசத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுள் போலி பொலிஸ் அறிக்கை உள்ளிட்டவையும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆவணங்களை தயாரிக்கப் பயன்படுத்திய இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சந்தேகநபர்களுகளுள் ஒருவர் போதைப்பொருள் வர்த்தக குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.