தமிழரசின் பங்காளியாகிறது ஈபிடிபி – சபைகளில் இணைந்து செயற்பட இணக்கம் !

1 0

உள்ளூராட்சி சபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஈபிடிபி ஏற்றுக்கொண்டு தமிழரசின் பங்காளிகளாயிருக்க இணங்கியுள்ளது.

இது தொடர்பில் இன்று (13) கூடிய ஈ.பி.டி.பி உயர்மட்டம் இறுதி முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசமைக்க ஆறு மாத காலத்திற்கு ஆதரவு வழங்குவதென்றும் ஆறு மாத கால அவர்களின் நிர்வாக நடவடிக்கைகள் திருப்திகரமாக இருந்தால் தொடர்ந்தும் பங்காளிகளாக இருப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை ஆனோல்டை யாழ் மாநகர முதல்வராக்குதல் மற்றும் ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைத்தல் என்ற சுமந்திரன் அணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள யாழ் மாநகரசபைக்கு உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பலர் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அவ் அணி யாழ் மாநகரசபையில் சுயாதீனமாக இயங்குவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் தேவைப்படின் தாம் ஒருவரது பெயரை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக பிரேரிக்கவுள்ளதாகவும் புதிதாக இணைந்த உறுப்பினர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

Related Post

விபத்தில் பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் பலி

Posted by - March 5, 2017 0
ருவான்வெல்ல – அமித்திரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். சிவனொலி பாத யாத்திரைக்கு சென்று திரும்பிய வேன் ரக வாகனம் ஒன்று…

மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணி இடை நிறுத்தம்

Posted by - November 13, 2018 0
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது நேற்று திங்கட்கிழமை எவ்வித அறிவித்தல்களும் இன்றி இடை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக இடம்பெற்ற அகழ்வு…

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

Posted by - April 1, 2017 0
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் முன்னெடுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் இன்று அறிவித்ததையடுத்து,…

வவுனியாவில் ரி – 56 துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Posted by - August 7, 2018 0
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனாமடு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 1,760 துப்பாக்கி ரவைகள் மீட்கப்கட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி

Posted by - October 4, 2016 0
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்து 22 வயதுடைய…

Leave a comment

Your email address will not be published.