சிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 இன் முதல் இருநாள் நிகழ்வுகள்!

4 0

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும்; வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் முதல் இருநாள் நிகழ்வுகள் கடந்த சனி (10), மற்றும் ஞாயிறு (11) ஆகிய இரு தினங்கள் வெகு சிறப்பாக இடம் பெற்றன.முதல் நாள் (10.02.2018) நிகழவின் ஆரம்ப நிகழ்வாக 26.06.1989 அன்று வவுனியாவில் இடம் பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த கப்ரன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பாலர் பிரிவு மற்றும் மேற் பிரிவுகளில் தனிப் பிரிவுப் போட்டியும், மத்திய பிரிவு குழு போட்டியும் இடம் பெற்றன.இரண்டாம் நாள் (11.02.2018) நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக 27.03.1988 அன்று இந்திய படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை நரேந்திரனின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அறிமுகப்படுத்தப் பட்டனர். தொடர்ந்து மத்தியபிரிவில் தனிப்பிரிவும், கீழ்ப்பிரிவின் குழுப் போட்டியும் இடம் பெற்றன.
எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) கீழ்ப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தனிப்பிரிவுப் போட்டியும், மேற்பிரிவு மற்றும் அதி மேற்பிரிவு களின் குழுப் போட்டியும்,
ஞாயிற்றுக்கிழமை (18.02.2018) அன்று இறுதிப் போட்டியும் பிளோமினிலில் நடை பெற உள்ளன.

Related Post

தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி

Posted by - May 2, 2017 0
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10…

சுவிசில் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற ‘எழுச்சிக்குயில் 2016″

Posted by - June 27, 2016 0
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ…

ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி.

Posted by - July 1, 2016 0
ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய 11ம் ஆண்டு விளையாட்டுப் போட்டி கடந்த 25.06.2016அன்று சனிக்கிழமை காலை 10மணியளவில் ஸ்ராஸ்பூர்க் நகரில் உள்ள ROTONDE…

சர்வதேச சமூகம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது! – கஜேந்திரகுமார்

Posted by - June 26, 2016 0
பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நாவோ, சர்வதேச சமூகமோ இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…

தமிழ்மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் தனிநாட்டினைக் கோருங்கள் – அபயதிஸ்ஸ தேரர்

Posted by - November 8, 2017 0
தமிழ்மக்களுக்கு என்று ஒரு தனிநாடு இல்லாததே தமிழர்களுக்கு இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு உள்நாட்டில் தீர்வைத் தேடுவதிலும் பார்க்க அதிகளவான தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடு…

Leave a comment

Your email address will not be published.