தமிழ் வண்டுகளும், முஸ்லிம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும்-உதயகம்மன்பில

1 0

தமிழ் வண்டுகளும், முஸ்லிம் தேனீக்களும் மொய்க்க மொட்டு மலரும் என பாராளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவருமான, உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜனபெரமுன கட்சி அடைந்த வெற்றியுடன் கொழும்பு அரசியல் தன் வலுச் சமநிலையை இழந்துள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் நாலரை ஆண்டுகளுக்கு பாராளுமன்றை ஜனாதிபதி கலைக்க முடியாத நிலையில், 59 நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட கூட்டு எதிரணியினர் பல பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்கான பேரம்பேசல்கள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை் பலர் முதற்கட்டமாக எதிரணிக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆறுமுகம் தொண்டமானின் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளது. பிரதான முஸ்லிம் கட்சியின் அமைச்சர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளதாக முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்கனவே மஹிந்த அரசாங்கத்தில் இருந்தது என்ற அடிப்படையிலும், கட்சியின் செயலர் டக்ளஸ்தேவானந்தாவின் நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையிலும் அவருக்கும் மஹிந்த அழைப்பு விடுக்கலாம்.

இத்தகைய நிலை உருவாகினால் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மொட்டுடன் நெருக்கமாகலாம். ஆயின் ஐக்கியதேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தனது பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும் போது பெரும்பான்மையை நிருபிக்கும் மஹிந்த அணியில் இருந்து ஒருவர் பிரதமர் ஆக முடியும்.

அவ்வாறு மஹிந்த பிரதமர் ஆகும் பட்சத்தில் ஜனாதிபதியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவந்து அவரை பதவி நீக்க முடியும்.

ரஸ்யாவில் சட்டம் இடம்கொடுக்காத போது புட்டின் தனது நம்பிக்கைக்கு உரியவைரை ஜனாதிபதியாக்கி பனி அதிகாரத்தை தன்வசமாக்கியதற்கு நிகரான நிகழ்வுகள் இலங்கையிலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

நாட்டில் வாகனப் பயன்பாடு அதிகரிப்பு

Posted by - June 13, 2018 0
நாட்டில் தனிப்பட்ட ரீதியிலான வாகனப் பயன்பாடு அதிகரித்துள்ளமையானது பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராவதற்கான காலம் எழுந்துள்ளதாக…

சீரற்ற காலநிலை:பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - October 9, 2018 0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இரண்டு நாள் அரசமுறை…

இந்திய இலங்கை கடற்படையினர் ஆய்வுகளை நடத்தவுள்ளனர்

Posted by - October 25, 2017 0
இலங்கை கடற்படையினரும் இந்திய கடற்படையினரும் இணைந்து தென் மற்றும் மேல்மாகாண கரையோர பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் இந்த நடவடிக்கையில் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ்…

புதிய வரிச்சட்டமூலம் பல நிவாரணங்களை இல்லாமல் செய்துள்ளது – பந்துல

Posted by - August 30, 2017 0
நடைமுறையில் உள்ள தேசிய வரி சட்டமூலத்தில் உள்ள நிவாரணம், புதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தில் குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல…

உள்நாட்டு முதலீட்டாளர்கள் முன்வராவிட்டால் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு

Posted by - August 9, 2017 0
இந்நாட்டு தேயிலை தொழிற்துறையை மேம்படுத்த முதலீட்டாளர்கள் முன்வராவிட்டால் வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…

Leave a comment

Your email address will not be published.