ரஷியா விமான விபத்து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை

2 0

ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார்.

ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார்.

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள், 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.

ஆனால், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனது. விசாரணையில், மாஸ்கோவின் அர்குனோவோ பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 70 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார். அப்போது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Post

ஹிலரிக்கு நிமோனியா

Posted by - September 12, 2016 0
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஜனநாயக கட்சியின் ஹிலரி கிளிண்டன் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவ்யோர்க் நகரின் உலக வர்த்த மையம் மற்றும் வேஷிங்டனின்…

நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை: பாக். ராணுவ தளபதி

Posted by - September 20, 2017 0
பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் ராணுவத்தின் பங்கு எதுவும் இல்லை என பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மோரா சூறாவளி, பங்களாதேஸில் இருந்து இந்தியா நோக்கி நகர்கிறது

Posted by - May 31, 2017 0
பங்களாதேஸை தாக்கிய மோரா சூறாவளி வலு குறைவடைந்து இன்றைய தினம் இந்தியாவை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அசாம், அருணாச்சல் பிரதேஸ் போன்ற பகுதிகளில் மணிக்கு 100…

சிரியா: துருக்கி விமானப்படை தாக்குதலில் 9 பேர் பலி!

Posted by - January 21, 2018 0
சிரியாவின் ஆப்ரின் பகுதியில் துருக்கி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் 90 சதவீத நிலப்பரப்பை இழந்துள்ளனர்.

Posted by - October 18, 2017 0
ஐ.எஸ். தீவிரவாதிகள் 2014ஆம் ஆண்டு தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலப்பரப்பில் அன்னளவாக 90 சதவீதத்தை இழந்துள்ளனர். அமெரிக்க கூட்டுப்படை இதனைத் தெரிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியா ஆகிய…

Leave a comment

Your email address will not be published.