டிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா?

3 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த மகன் டொனால்டு ஜூனியர், இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெனிசா வீட்டிற்கு நேற்று காலை தபால் வந்தது. அதை வாங்கிய வெனிசா அந்த தபால் உறையை பிரித்து பா்த்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும், அப்போது வீட்டில் இருந்த வெனிசாவின் தாயார் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் என அடுத்தடுத்து சிலரும் பாதிப்பு அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவ்ழைக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த வெனிசா மற்றும் உறவினர்களை மீட்டு நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் ஜூனியர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடிதத்தின் உறையில் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடிதம் பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முத்திரையிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Post

ஒரே மாதிரியான வலி நிவாரணிகள் – இருதய கோளாறை உண்டாக்கும்

Posted by - September 29, 2016 0
ஒரே மாதிரியான வலி நிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்வதானது, இருதய கோளாறுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 77 சராசரி…

மலேஷியவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 8, 2017 0
மியன்மாரிலிருந்து மலேஷியவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 59 ஆயிரம் அகதிகள் மலேஷியாவில் பதிவு செய்துள்ளதாக ஐக்கிய…

கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் பலி

Posted by - August 27, 2017 0
பிரிட்டன் நாட்டில் இரு கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

மியான்மரில் ரோஹிங்கியா போராளிகள் மீண்டும் தாக்குதல்

Posted by - January 5, 2018 0
மியான்மர் நாட்டில் ராணுவ வாகனம் மீது ரோஹிங்கியா போராளிகள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் மரணம் – டிரம்ப்

Posted by - August 27, 2018 0
அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் எம்.பி. மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு டிரம்ப், தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். 

Leave a comment

Your email address will not be published.