குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரிய சியர் லீடர்ஸ் பெண்களின் முகமூடியால் சர்ச்சை

1 0

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், வடகொரியாவில் இருந்து வந்துள்ள சியர் லீடர் பெண்கள் அணிந்த முகமூடியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்யங் நகரில் நடந்து வருகின்றது. பழைய பகைகளை மறந்து வடகொரியாவும் தனது அணிகளை அனுப்பியுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடந்த ஐஸ் ஹாக்கி பெண்கள் போட்டியில் சுவிச்சர்லாந்து அணிக்கு எதிராக ஒருங்கிணைந்த கொரிய அணி மோதியது.
அப்போது, அணியை உற்சாகப்படுத்த சியர் லீடர்கள் மைதானத்தில் இருந்தனர். அவர்கள் வடகொரியாவில் இருந்து வந்த பெண்கள் ஆகும். போட்டியின் போது, அவர்கள் அணிந்திருந்த முகமூடி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
வடகொரியா எனும் நாட்டை உருவாக்கியவரும், தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா, கிம் இல் சங்-கின் இளவயது புகைப்படத்தை முகமூடியாக சியர் லீடர் பெண்கள் அணிந்துள்ளனர்.
“பார்த்தீர்களா, கிம் இல் சங் புகைப்படம் மூலம் வடகொரியா தனது பிரச்சாரத்தை விளையாட்டில் கொண்டுவந்துவிட்டது. வடகொரியாவின் புத்தியே இதுதான்” என தென்கொரியாவைச் சேர்ந்த பழமைவாதிகள் குரல் எழுப்ப, தென்கொரிய அரசு ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்றதே பெரிய விஷயம், இப்போது, இவ்விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என கருதியுள்ளது.

Related Post

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி

Posted by - June 3, 2018 0
சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த அரிய வகை சுருக்கு பாம்பு

Posted by - February 23, 2017 0
பிரேசில் காடுகளில் 64 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வகை சுருக்கு பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் வாழும் அரிய வகை பாம்புகளில் ஒன்று…

உங்கள் தேசத்தை காப்பதில் தோற்றுவிட்டீர்கள்: தாக்குதலுக்கு முன் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஆசாமி

Posted by - December 13, 2017 0
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பேருந்து முனையத்தில் தாக்குதல் நடத்திய வங்காளதேச ஆசாமி, பேஸ்புக்கில் அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தரக்குறைவாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு

Posted by - September 9, 2016 0
அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான்: ஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை

Posted by - October 19, 2017 0
இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் அவர்மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் தீவிரவாத நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

Leave a comment

Your email address will not be published.