70 பெண்கள் பாலியல் புகார் தொடர்பாக ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு

0 0

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர்.

ஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 65). இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் பல முக்கியமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

வெய்ன்ஸ்டீன் பட நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண்களை பல ஆண்டுகளாக ஹார்வி வெய்ன்ஸ்டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஹார்வி வெய்ன்ஸ்டீன், அவரது நிறுவனம் மற்றும் ஹார்வியின் சகோதரரும், நிறுவனத்தின் இணை தலைமை செயல் அதிகாரியுமான பாப் வெய்ன்ஸ்டீன் ஆகியோர் மீது நியூயார்க் அட்டார்னி ஜெனரல் எரிக் சினீடர்மென் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் மீதும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரக்கோரியும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மருமகன் அந்தஸ்து குறைப்பு

Posted by - March 1, 2018 0
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னரின் அந்தஸ்து திடீரென குறைக்கப்பட்டு உள்ளது. அதற்கான குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

லிபிய கடற்பகுதியில் படகு விபத்து – 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார்.

Posted by - April 14, 2017 0
லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனார். லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் 15 பெண்களும் 5 சிறார்களும் அடங்குவதாக…

வெனிசுலா தற்காலிக அதிபராக தன்னைத் தானே அறிவித்தார் ஜூவான் கெய்டோ- அமெரிக்கா, கனடா ஆதரவு

Posted by - January 24, 2019 0
வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்தார். இதனை அமெரிக்கா அங்கீரித்துள்ளது.  வெனிசுலாவில் கடந்த சில வருடங்களாகவே அதிபர் மதுராவுக்கு…

பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25ம் தேதி பொது தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - May 27, 2018 0
பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 

Leave a comment

Your email address will not be published.