பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன கூட்டம்!

2 0

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாவட்ட தலை நகரங்களில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட் டணி கட்சிகள் ஏற்கனவே மறியல் போராட்டம் நடத்தி இருந்தன.

அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் கண்ட பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாவட்ட தலை நகரங்களில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.

முதன்மை செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், கடலூரில் கனிமொழி எம்.பி.யும், திருவாரூரில் டி.ஆர்.பாலுவும் பேசுகிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் சென்னையிலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வடசென்னையிலும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் விழுப்புரத்திலும், முன்னாள் எம்.பி. தா.பாண்டியன் வடசென்னையிலும் பேசுகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காஞ்சீபுரத்திலும், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நெல்லையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் ‘லீக்‘கின் தேசிய தலைவர் காதர் மொகாதீன் ஈரோட்டிலும் கண்டன பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்கள்.

இதுதவிர அனைத்து மாவட்ட தலைவர்களும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசுகிறார்கள்.

Related Post

நாளை நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு

Posted by - November 7, 2017 0
மழை நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவதால் நாளை (புதன்கிழமை) நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

பஸ்-கார்-ஆட்டோக்களில் பேனிக்பட்டன் கட்டாயம் விரைவில் அமல்படுத்த திட்டம்

Posted by - April 23, 2018 0
பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் விதமாக பஸ்களில் அபாய கால எச்சரிக்கை கருவியான ‘பேனிக்பட்டன்’ விரைவில் பொருத்தப்பட உள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் – நிதியுதவி அறிவிப்பு

Posted by - August 21, 2017 0
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

Posted by - May 14, 2017 0
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி தமிழக அரசு மனு

Posted by - October 30, 2018 0
தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

Leave a comment

Your email address will not be published.