யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறியினால் குழப்பம்!!

2 0

யாழ். மாநகரசபை மேயர் தெரிவில் இழுபறி நிலை தோன்றியுள்ளது.யாழ். மாநகரசபை மேயர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் காலத்திலேயே அந்த கருத்து வாபஸ் வாங்கப்பட்டிருந்தது.இதன் பின்பு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். மாநகரசபைக்கான மேயர் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் நிலவரம் சூடு பிடித்துள்ளது.

அதனடிப்படையில் யாழ். மாநகரசபை மேயராக ஆர்னோல்ட்டை தெரிவு செய்ய வேண்டாம் என கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் எடுத்து கூறியுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆர்னோல்ட்டை யாழ். மேயர் வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உடன்பாடில்லாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சமூக சேவகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சொலமன் சிறிலை நியமிக்க வேண்டுமென்ற கருத்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள், பிறகட்சி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைமைகள் ஆகியோரிடம் மேலோங்கியுள்ள சூழலில் யாழ். மேயர் வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக கவனத்தை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படலாம் என கட்சியின் பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஸ்ட தலைவரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

யாழ்.சூட்டுச் சம்பவம் விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது –ரி.கனகராஜ்-

Posted by - October 29, 2016 0
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்கழு உண்ணிப்பாக அவதானித்து…

தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை

Posted by - September 16, 2017 0
தேர்­தல்­க­ளுக்­குத் தயா­ரா­கு­மாறு ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அதி­ர­டி­யா­கப் பணிப்­புரை விடுத்­துள்­ளது கூட்டு அர­சின் தலை­மைப்­பீ­டம்.

அவசர அழைப்பு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரித்தானியா.

Posted by - February 8, 2018 0
எதிர்வரும் 9/02/18 வெள்ளிக்கிழமை  பி.ப 2 மணி சிறிலங்கா தூதுவராலயம் முன்பாக அணி திரளுமாறு வேண்டுவதோடு பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் சென்று இலங்கை அரசு புலம்…

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டண அறவீடு – விசாரணைகள் நடத்தப்படவுள்ளது

Posted by - July 9, 2017 0
தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் அதிக கட்டண அறவீடு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார்…

எமது அடுத்த தலைமுறைக்கு அகதி வாழ்க்கையை அன்பளிப்பாக கொடுக்க போகின்றோமா ??செல்வன் பா.லக்சன் யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்.

Posted by - May 12, 2017 0
யேர்மனியில் 3 வது நாளாக நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தில் மதியம் Stuttgart நகரை தொடர்ந்து மாலை 6 மணிக்கு Karlstruhe நகரத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில்…

Leave a comment

Your email address will not be published.