இன்று மகா சிவராத்திரி விரதம்

28262 0

சிவசக்தி அம்சம் கொண்ட நாளாகப் போற்றப்படும் மஹா சிவராத்திரி விரதம் இன்று இந்து மக்களால் புனிதமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

சிவனுக்கு உரிய இரவு எனப் பொருள் படும் மகா சிவராத்திரி விரதப் பூஜைகள் இன்று உலகம் பூராவும் உள்ள இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது

சிவராத்திரியானது மகாசிவராத்திரி, ஜோகசிவராத்திரி, நித்தியசிவராத்திரி  மாத சிவராத்திரி, பட்சசிவராத்திரி என ஐந்து வகைப்படும். இதில் ஆண்டு தோறும் மாசி மாத தேய்பிறை 13ஆம் திகதியில் அதாவது கிருஷ்ண பட்சத்து சதுர்த்தியில் வரும் விரதம் மகாசிவராத்திரி விரதமாகும்.

திருக்கேதீஸ்ச்சரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம், திருக்கோணேச்சரம், ஒட்டிசுட்டான் தான்தோன்றீச்சரம், முன்னேச்சரம், நகுலேஸ்வரம். காரைநகர் சிவன், வண்ணார் பண்ணை சிவன், போன்ற அனைத்து சிவன் ஆலயங்களிலும் மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக இடம்பெறுகின்றது.

Leave a comment