அய்யூப் அஸ்மின் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

1382 0

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தனது பதவியை இரானிஜா செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து வருவதாக டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.

குறித்த விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே தாம் அந்த பதவியில் இருக்கின்றேன் எனினும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வவுனியால் குறைவாகவும் முல்லைத்தீவில் ஓரளவும் யாழ்ப்பாணத்தில் ஒரு உறுப்பினர் 30 வாக்குகளாலும் தோல்வியடைந்திருக்கின்றார்.

இதிலிருந்து முஸ்லிம்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்பான விருப்பு குறைந்தே காணப்படுகின்றது.

இது தொடர்பில் எமது கட்சித்தலைமைகளுடன் இன்று கலந்துரையாட இருந்த நிலையிலும் சில காரணங்களால் இன்று அது தவிர்க்கப்பட்டுள்ளதுடன் விரைவில் பதிவு இராஜினாமா செய்வது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment